வெற்றிக்கு வழிகாட்டுதல், நல்ல உதாரணம் அமைத்தல்
நிதியை அணுகி, நாட்டின் வளர்ச்சிக் கதையில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அதிகாரம் அளிக்க எங்களை ஊக்குவிக்கும் எங்கள் தொலைநோக்கு தலைவர்களை சந்தியுங்கள்.
ரீடெய்ல் சொத்துக்கள், காப்பீடு, கார்டுகள் மற்றும் செல்வ மேலாண்மை போன்ற பல்வேறு நிதி டொமைன்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி, ஆஷிஷ் சப்ரா அவர்கள் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தை விரிவான டிஜிட்டல் மயமாக்கல், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் கையகப்படுத்தல் மற்றும் முழுமையான வளர்ச்சியின் மாற்றாக இயக்கி வருகிறார். இலாபம் நஷ்ட (பி&எல்) நிர்வாகம், டிஜிட்டல் முயற்சிகள், மூத்த பங்குதாரர் நிர்வாகம் மற்றும் இலாபத்திற்கு வழிகாட்டும் வணிகங்களில் அவருடைய பரந்த அனுபவம் டிவிஎஸ் கிரெடிட்டின் பிரகாசமான எதிர்கால பாதையை வடிவமைக்கிறது. அவரது வழிகாட்டுதலின் கீழ், நிறுவனத்தின் மொத்த வருமானம் FY23-யில் முந்தைய ஆண்டை விட 51% ஆக வளர்ந்துள்ளது. பணியிட கலாச்சார மதிப்பீட்டில் 'கோல்டு ஸ்டாண்டர்டு' - என்ற சிறந்த இடத்தால் இந்த நிறுவனம் 'பணிக்கு சிறந்த இடமாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைவதற்கு முன்னர், ஆஷிஷ் அவர்கள் பஜாஜ் குழுமத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம், வீட்டு நிதி, பொது காப்பீடு மற்றும் என்பிஎஃப்சி துறைகளில் முன்னணி செயல்பாடுகளை வழங்கினார். அவருடைய தொழில்முறை பயணத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் எச்எஸ்பிசி-யின் மதிப்புமிக்க அனுபவங்களும் அடங்கும். அவர் இன்சீடு, ஃபோன்டேன்பளூ-வில் இருந்து மேம்பட்ட மேலாண்மை திட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.
ரூபா சம்பத் குமார், கணக்கு மாற்றங்களை நிர்வகித்தல், கருவூல மேலாண்மை, நிறுவன கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் பங்குதாரர் ஈடுபாடு ஆகியவற்றை நிர்வகிப்பதில் திறமையான ஒரு அனுபவம் வாய்ந்த நிதி நிபுணராவார்.
ரூபா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 20 வருட அனுபவமுள்ள சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் ஆவார், சான்றளிக்கப்பட்ட பப்ளிக் அக்கவுண்டண்ட் பதவியைப் பெற்றுள்ளார். முன்னதாக, இவர் ஹிந்துஜா ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சிஎஃப்ஓ ஆக பணியாற்றினார் மற்றும் நிதி மற்றும் கருவூல செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, ஹிந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் நிதித் தலைவராக இருந்தார். இவர் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் (பிடபிள்யூசி) மற்றும் ஐசிஐசிஐ வங்கியிலும் பணியாற்றியுள்ளார்.
அனந்தகிருஷ்ணன் ஆர், பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் பிரிவுகளில் சில்லறை நுகர்வோர் கடன் வழங்குவதில் 25 வருட நிபுணத்துவத்துடன் அனுபவம் வாய்ந்த நிதிச் சேவை நிபுணராவார். அவர் தொடக்கத்தில் இருந்து டிவிஎஸ் கிரெடிட்டில் இருந்து வருகிறார், சில்லறை மற்றும் நுகர்வோர் வணிகத்திற்கான கடன் தலைவராக பணியாற்றினார். லாபகரமான வணிகப் பிரிவுகளை உருவாக்குதல், செயல்பாடுகளை விரிவுபடுத்துதல், எங்கள் போர்ட்ஃபோலியோவை அதிகரிப்பது மற்றும் எங்கள் வரம்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். திரு. அனந்தகிருஷ்ணன் எங்கள் கிரெடிட் மற்றும் ரிஸ்க் செயல்முறைகளை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், பன்முக விற்பனையை ஊக்குவித்தார், டிஜிட்டல் ஃபர்ஸ்ட் வணிகங்களை மேம்படுத்தியுள்ளார்.
டிவிஎஸ் கிரெடிட்டில், திரு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் இரு சக்கர வாகனக் கடன்கள், மூன்று சக்கர வாகனக் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள், பயன்படுத்திய கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் வகைகளில் வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டார். டிவிஎஸ் கிரெடிட்டில் சேருவதற்கு முன்பு, அவர் பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் சோலா டிபிஎஸ் ஆகியவற்றில் பணியாற்றினார். அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் மற்றும் கிரேட் லேக்ஸ் மற்றும் எக்எல்ஆர்ஐ ஆகியவற்றில் அனலிட்டிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
முரளிதர் ஸ்ரீபதி, இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயன்படுத்திய கார்களுக்கான சில்லறை வணிகத்திற்கு தலைமை வகிக்கிறார், 15 முக்கிய இந்திய மாநிலங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான பல்துறை தொழில்முறை அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் சுந்தரம் ஃபைனான்ஸ் சோழா விஎஃப் மற்றும் பிஏஎஃப்எல் உடன் பணிபுரிந்தார், சேல்ஸ், கலெக்ஷன், கடன், வணிக வாகனங்களுக்கான வணிக செயல்பாடுகள், புதிய கார்கள், பயன்படுத்திய கார்கள், இருசக்கர வாகனங்கள், கார்ப்பரேட் ,லீசிங், நுகர்வோர் சாதனங்கள், அலுவலக ஆட்டோமேஷன் உபகரணங்கள் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு பொறுப்புகளை கையாண்டுள்ளார்.
அவரது முதன்மை திறன்களில் நெருக்கடி மேலாண்மை, ஸ்டார்ட்-அப் மற்றும் பில்டு ஆபரேட் டிரான்ஸ்ஃபர் பணிகள் அடங்கும். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி, அவர் சென்னை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் இருந்து வணிக பகுப்பாய்வு சான்றிதழையும் பெற்றுள்ளார்.
சௌஜன்யா அலுரி இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டம் பெற்றவர் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். புராடக்ட் மேனேஜ்மெண்ட், இன்ஜினியரிங், ஆபரேஷன்ஸ், அஜைல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மாற்றம், கிளவுட் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை மேற்பார்வையிடும் டெக்னாலஜி விஷன் மற்றும் ஸ்ட்ராட்டஜியை வழிநடத்துவதில் அவர் சிறந்து விளங்குகிறார்.. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸி துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
டிவிஎஸ் கிரெடிட்டில் சௌஜன்யா, நிறுவனத்தின் டெக் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரேட்டஜியை உருவாக்கும் பொறுப்பில் உள்ளார். டிவிஎஸ் கிரெடிட்டில் சேருவதற்கு முன்பு, அவர் நேசனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ)வில் டிஜிட்டல் தொழில்நுட்பத் தலைவராகப் பணியாற்றினார், மொபைல் பேமெண்ட் தளங்கள், தரவுத் தளங்கள், ஏஐ மாதிரிகள், கிளவுட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மற்றும் பிளாக்செயின் செட்டில்மென்ட் சிஸ்டம்களின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர் ஜிசி டிஜிட்டல், சிஃபி மற்றும் அக்சென்ச்சர் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் வாசிப்பது ஆகியவற்றில் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் உள்ளது.
ஷெல்வின் மேத்யூஸ் ஒரு பட்டய கணக்காளர் (ஐசிஏஐ) மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (ஐசிஎம்ஏஐ), இவர் நிதி சேவை துறையில் 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். டிவிஎஸ் கிரெடிட்டில் வலுவான நிறுவன அளவிலான ரிஸ்க் மேனேஜ்மெண்டை உருவாக்கும் பொறுப்பில் உள்ளார். கடன் வழங்கும் துறைக்கான என்டர்பிரைஸ் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் (இஆர்எம்) கட்டமைப்பை உருவாக்குதல், கேஒய்சி-ஏஎம்எல் விதிகளை செயல்படுத்துதல் மற்றும் என்பிஎஃப்சி-களுக்கான ஆர்பிஐ வழிகாட்டுதல்களுடன் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் நடைமுறைகளை சீரமைத்தல் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவர். ஐஐஎம் பெங்களூரில் இருந்து என்டர்பிரைஸ் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சான்றிதழைப் பெற்றுள்ளார். அவர் ஐஎஸ்ஓ 27001 (தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகள்) மற்றும் ஐஎஸ்ஓ 22301 (வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்புகள்) சான்றளிக்கப்பட்ட உள்புற தணிக்கையாளர். /யூக்ரோ கேப்பிட்டல் லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க், எல்&டி ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் (ரிலையன்ஸ் கேப்பிட்டலின் துணை நிறுவனம்) போன்ற நிறுவனங்களுக்கான ஆபத்து மேலாண்மையின் பல பகுதிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
பிரசாந்த் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் புனே சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் (எஸ்ஐபிஎம்)-யில் எம்பிஏ படித்துள்ளார். அவர் யுஎஸ்ஏ-வில், எச்ஆர் மேலாண்மை சங்கத்தின் எஸ்சிபி (சான்றளிக்கப்பட்ட சீனியர் நிபுணர்) சான்றிதழைப் பெற்றுள்ளார்.
உற்பத்தி, ஐடி விநியோகம், பேங்கிங், பொதுக் காப்பீடு, வங்கி அல்லாத நிதி நிறுவனம் (என்பிஎஃப்சி) மற்றும் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் (எச்எஃப்சி) போன்ற வணிகங்களில் பிளான்ட் எச்ஆர், பிஸ்னஸ் எச்ஆர் பார்ட்னர், பிராக்டிஸ் லீடு எச்ஆர் முதல் எச்ஆர் லீடர்ஷிப் வரையிலான 25 வருட பலதரப்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது. அவர் பல நிறுவனங்களில் தலைமை மனித வள அதிகாரியாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நடைமுறைகளை வழிநடத்தி பல்வேறு மாற்ற நிர்வாகம் மற்றும் புதுமையான தலைமைத்துவ முயற்சிகளை வழிநடத்தியுள்ளார். சரியான நபர்களின் சூழலை உருவாக்கி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வணிகமாக செயல்படுவதற்கு வழிவகுப்பதன் மூலம் வணிகச் செயல்திறனுக்கு உதவுவதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
திலிப் பிரமல் குழுமத்தில் அவர் பணிபுரிந்துள்ளார், அங்கு அவர் பிளான்ட் எச்ஆர் ஆக அடிப்படை அனுபவத்தைப் பெற்றார், பின்னர் கோத்ரேஜ் குழுமம் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கு மாறினார். எங்களுடன் இணைவதற்கு முன்னர், அவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் குழுவில் இருந்தார். ரிலையன்ஸ் கேப்பிட்டல் குழுமத்திற்குள், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் கடைசியாக குழு மட்டத்தில் மனிதவளத் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
சரண்தீப் சிங் டிவிஎஸ் கிரெடிட்டில் சீஃப் மார்க்கெட்டிங் ஆஃபிசராக (சிஎம்ஓ) உள்ளார். பஞ்சாப் அக்ரிகல்சரல் யுனிவர்சிட்டியில் அக்ரிகல்சரல் இன்ஜினியரிங் இல் பி.டெக் பட்டமும், மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். 18 ஆண்டுகளுக்கும் மார்க்கெட்டிங், சேல்ஸ் சிஆர்எம் மற்றும் பிஎஃப்எஸ்ஐ மற்றும் வாகனத் தொழில்களில் உத்தி நிபுணத்துவம் கொண்ட அவர், பிராண்ட் கம்யூனிகேஷன், மார்க்கெட் ரிசர்ச், டிஜிட்டல் பிசினஸ் பகுப்பாய்வு மற்றும் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பல முயற்சிகளை நிர்வகித்து வழிநடத்தியுள்ளார். நிறுவனத்தின் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளை உருவாக்குதல் மற்றும் பல விருதுகளை வென்ற சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு மாற்ற முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் அவர் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
டிவிஎஸ் கிரெடிட்டின் புதிய பிராண்ட் அடையாளத்தை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார், இது ஒரு புதுப்பிக்கப்பட்ட காட்சி அடையாள அமைப்புக்கு வழிவகுத்தது மற்றும் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப பிராண்டின் மறுசீரமைப்புக்கு வழிவகுத்தது. அவரது தலைமையின் கீழ், நிறுவனம் மதிப்புமிக்க ஆர்எம்ஏஐ ஃபிளேம் விருதுகள் ஆசியா 2018 இல் ஆண்டின் சிறந்த விஷன் மற்றும் விஷுவல் கேம்பைன் உட்பட பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது.. அவர் சிஎம்எஸ் ஆல் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த கன்டென்ட் மொகல் ஆக அங்கீகரிக்கப்பட்டார், 2018 இல் அடோப் டிஜி100 ஆல் சிறந்த 100 டிஜிட்டல் மார்க்கெட்டர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், மேலும் 2018 இல் லிங்க்ட்இன் ஆல் சிறந்த 50 கன்டென்ட் மார்க்கெட்டிங் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.. கூடுதலாக, அவர் எம்எம்எஃப்எஸ்எல் இல் இருந்த காலத்தில், 2017 ரூரல் மார்க்கெட்டிங் விருதுகளில் ஆண்டின் யூத் அச்சீவர் விருதைப் பெற்றார்.
கஸ்தூரிரங்கன் பி.வி. ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மற்றும் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட், பல்வேறு நிதிப் பணிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். டிவிஎஸ் கிரெடிட்டில் சீஃப் ட்ரசரி ஆஃபிசர், அவர் அசெட் லையபிளிட்டி மேனேஜ்மெண்ட் கமிட்டியை மேற்பார்வையிட்டு, ட்ரசரி மேனேஜ்மெண்ட், முதலீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வெளிப்புற பங்குதாரர் தொடர்புகளை நிர்வகிக்கிறார். வரிவிதிப்பு, செலவு, தணிக்கை, நிதிய அறிக்கை மற்றும் மூலோபாய நிதி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியவை அவரது நிபுணத்துவ பகுதிகளில் ஒன்றாகும். டிவிஎஸ் கிரெடிட்டில் சேருவதற்கு முன்னர் நிசான் அசோக் லேலேண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிஎஃப்ஓ ஆக இருந்தார். சர்வதேச பணி அனுபவம் உள்ளவர், டிவிஎஸ் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
பியூஷ் சௌத்ரி ஏறத்தாழ 18 வருட தணிக்கை அனுபவத்தைக் கொண்டுள்ளார், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (ஐசிஏஐ) மற்றும் சிஐஎஸ்ஏ (தேர்ச்சியடைந்தவர்), பிக் 4s மற்றும் பிஎஃப்எஸ்ஐ துறையில் பின்புலம் கொண்டவர். டிவிஎஸ் கிரெடிட்டில் சீஃப் இன்டர்னல் ஆடியோ ஆஃபிசராக, ரிசர்வ் வங்கியின் தரநிலைகளுக்கு இணங்க, ஒரு வலுவான ரிஸ்க் பேஸ்ட் இன்டர்னல் ஆடிட் (ஆர்பிஐஏ) கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான (என்பிஎஃப்சி-கள்) ரிஸ்க்-பேஸ்ட் இன்டர்னல் ஆடிட் (ஆர்பிஐஏ) கட்டமைப்பை உருவாக்குதல், உள் தணிக்கை நடைமுறைகளை தானியங்குபடுத்துதல், ஐடி ஆடிட்களை நடத்துதல், இன்டர்னல் ஃபைனான்சியல் கன்ட்ரோல்ஸ் (ஐஎஃப்சி) கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தணிக்கைக்கு வழங்குதல் ஆகியவை அவரது நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகள். சிஸ்டம் மற்றும் செயல்முறை உத்தரவாதம் தொடர்பான பல்வேறு திட்டங்களில் பிடபிள்யூசி மற்றும் டெலாய்ட் உடன் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உள்ளது (அப்ளிகேஷன் கன்ட்ரோல்ஸ் டெஸ்டிங், ஐடி ஆடிட்ஸ், எஸ்ஓஎக்ஸ், எஸ்எஸ்ஏஇ 16 ஈடுபாடுகள்).
விகாஸ் அரோரா, பிஎஃப்எஸ்ஐ துறையில், 18 ஆண்டுகளுக்கும் மேலான மதிப்புமிக்க அனுபவத்தைக் கொண்டு, இணக்கம், நிர்வாகம் மற்றும் சட்ட விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர் ஆவார். கார்ப்பரேட் சட்டம், என்பிஎஃப்சி இணக்கம், விதிமுறைகள், நிர்வாகம், தரவு தனியுரிமை, தொழிலாளர் சட்டங்கள், ஒப்பந்த மேலாண்மை, வழக்கு, ஃபெமா, மோசடி எதிர்ப்பு மேலாண்மை மற்றும் பிஎம்எல்ஏ கம்ப்ளைன்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். கார்ப்பரேட் செக்ரட்டரி (ஐசிஎஸ்ஐ) மற்றும் சட்டப் பட்டதாரி (எல்எல்பி) ஆகிய பட்டங்களை அவர் பெற்றுள்ளார். தலைமை இணக்க அதிகாரியாக, ஒரு வலுவான இணக்க கட்டமைப்பை நிறுவுவதற்கும் அமைப்பின் இணக்க கலாச்சாரத்திற்கு வழிகாட்டுவதற்கும் அவர் பொறுப்பாவார். டிவிஎஸ் கிரெடிட்டில் சேருவதற்கு முன்னர், அவர் பிஎம்டபிள்யூ நிதி சேவைகளில் இணக்கம், சட்ட மற்றும் நிறுவன செயலாளர் தலைவராக இருந்தார். அவர் முன்னர் ஜிஇ மணி, கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜென்பேக்ட் உடன் பணியாற்றியுள்ளார்.
பதிவு செய்யுங்கள் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளுக்கு