நீங்கள் ஒரு விவசாய தொழிலில் ஈடுபட திட்டமிடுகிறீர்களா?
அல்லது நீங்கள் ஏற்கனவே விவசாயத் தொழில் செய்கிறீர்களா?
விவசாயம் விலையுயர்ந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! ஒரு விவசாயத்தை தொடங்கி நடத்துவது உங்களுக்கு அதிக செலவான விஷயமாகும்!
இதற்கு உங்களுக்கு நிதி தேவைப்படும், இங்குதான் விவசாய கடன்கள் உங்களுக்கு உதவுகிறது.
விவசாயக் கடன் பெறுவது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். சில நேரங்களில் கடன் வழங்குநரை அணுகுவது கூட கடினமாக இருக்கும். ஒரு விவசாய கடன் ஒப்புதலுக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, உங்களுக்கு ஏன் தேவை மற்றும் நீங்கள் அதை எவ்வாறு திருப்பிச் செலுத்துவீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தால் இது ஒரு எளிதான பணியாக இருக்கலாம்.
நீங்கள் விவசாயக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பொருத்தமான தொழில் திட்டத்தை கொண்டிருக்கவும்
நீங்கள் கடன் வழங்குநரிடம் சென்று "எனது விவசாய தொழிலுக்கு எனக்கு நிதி தேவை" என்று கூறினால், உங்கள் கடன் நிராகரிக்கப்படுவதற்கு 99 சதவீத வாய்ப்பு உள்ளது. மறுபுறம், நீங்கள் ஒரு சரியான தொழில் திட்டத்துடன் சென்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் எங்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் எவ்வாறு முதலீடு செய்வீர்கள் மற்றும் நீங்கள் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவீர்கள் என்பதை கடன் வழங்குநர் தெரிந்து கொள்வார். உங்கள் தொழில் திட்டத்தில் உங்கள் பின்னணி தகவல், மிஷன், இலக்குகள், நோக்கங்கள் மற்றும் மார்க்கெட்டிங் திட்டம் ஆகியவை உள்ளடங்குகின்றன என்பதை உறுதிசெய்யவும்.
2. உங்களிடம் நிதி அறிக்கைகள் இருப்பதை உறுதிசெய்யவும்
இது மிக முக்கியமான படிநிலைகளில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை அனைத்து கடன் வழங்குநர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நீங்கள் அணுகும் எந்தவொரு கடன் வழங்குநரும் வருமான அறிக்கை, பணப்புழக்க அறிக்கை, பண்ணை இருப்புநிலை மற்றும் தொழில் வரலாறு போன்ற உங்கள் நிதி ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் நிதி திறனை சரிபார்ப்பார்.
3. உங்கள் அடமானத்தை தயாராக வைத்திருங்கள்
அடமானம் என்பது உங்களுக்குச் சொந்தமான உங்கள் சொத்துக்களாகும் மற்றும் நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கி அதனை மீட்புக்காக பயன்படுத்தலாம். உங்களிடம் கடன் மதிப்புக்கு நிகரான சொத்து இருக்க வேண்டும். 'நீங்கள் எது போன்ற சொத்துக்களை அடமானம் வைக்க முடியும்?' என்று கேள்வி கேட்கப்பட்டால் அதற்கான பதிலுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும், கடன் மதிப்புக்கு நிகரான பண்ணை அல்லாத சொத்து உங்களிடம் இருந்தால், உங்கள் கடனுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
4. பொதுவான கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள்
இது மிகவும் வெளிப்படையானது என்று நீங்கள் நினைத்தாலும், அதனை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தகுதிகள் மற்றும் கடந்த அனுபவம் போன்ற பொதுவான கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் அடிப்படையில், உங்கள் வணிகத் திட்டம் பயனுள்ளதாக இருக்குமா அல்லது நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை கடன் வழங்குநர் தீர்மானிக்கலாம். எனவே, நீங்கள் ஒரு கடன் வழங்குநரிடம் நல்ல ஈர்ப்பை உருவாக்க விரும்பினால், நீங்கள் பொதுவான கேள்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களுடன் தயாராக இருந்தால் மற்றும் நீங்கள் கடன் வழங்குநரை அணுகுவதற்கு முன்னர் உங்கள் திட்டம் சரியானதாக இருந்தால், அவர்கள் உங்கள் கடனை ஒப்புதல் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அதை பெற்றவுடன், விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவதிலும், பழைய கடனை மறுநிதியளிப்பதிலும், பழுதுபார்ப்பு வேலையுடன் நிலத்தை மேம்படுத்துவதிலும், சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரத்திலும் நீங்கள் உகந்த நிதியைப் பயன்படுத்தலாம். நிறைய வங்கிகள் டிராக்டர் கடன்கள் தனித்தனியாக வழங்குகின்றன. எனவே, நீங்கள் டிராக்டர் கடன் வட்டி விகிதத்தை ஆன்லைனில் சரிபார்த்து பின்னர் அதை தேர்வு செய்யலாம்!