ஒரு டிராக்டர் உங்கள் விவசாய கனவுகளை நிறைவேற்ற நீங்கள் செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இந்நாட்களில் வங்கியானது பண்ணை கடன்கள் மற்றும் டிராக்டர் கடன்கள் ஆகியவற்றை எளிதான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் உடன் வழங்குகிறது. இந்நாட்களில் ஒரு டிராக்டரை வாங்குவது எளிதாகிவிட்டது. ஆனால் உண்மையான வேலை என்பது வாங்கிய பிறகுதான் தொடங்குகிறது. டிராக்டரை திறமையாக இயக்குவதற்கு நீங்கள் கிட்டத்தட்ட ஒரு நிபுணராக மாற வேண்டும்.
உங்கள் டிராக்டரை சிறந்த நிலையில் வைத்திருப்பது நல்ல அறுவடையைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் அதற்கு கணிசமான நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளும் அதற்கான சரியான பராமரிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். டிராக்டர்களை நல்ல வடிவத்தில் வைத்திருக்க சில பராமரிப்பு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. உரிமையாளர் கையேட்டை படிக்கவும்
ஒவ்வொரு உற்பத்தியாளரும் வாங்குபவர்களுக்கு ஒரு பயனர் கையேட்டை கொடுக்கிறார்கள், அது உபகரணங்களை கவனித்துக்கொள்வது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குகிறது. எனவே, நீங்கள் உரிமையாளரின் கையேட்டை பெற்று அந்த குறிப்புகளை பின்பற்றுவதை உறுதிசெய்யவும். இதில் பராமரிப்பு அட்டவணை, விவரக்குறிப்புகள், உபகரணங்களின் அனைத்து பகுதிகளின் இருப்பிடம் மற்றும் அடிப்படை செயல்பாட்டு வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.
2. அனைத்து பராமரிப்பு கருவிகளையும் பெறுங்கள்
டிராக்டர் பராமரிப்புக்கு சாதாரண வாகன பராமரிப்பு கருவிகளை விட வேறுபட்ட கருவிகள் தேவைப்படுகின்றன. எனவே, உங்கள் டிராக்டரை பராமரிக்க தேவையான அனைத்து கருவிகளையும் நீங்கள் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.
3. மழையில் இருந்து டிராக்டரை பாதுகாக்கவும்
மழையில் இருந்து உங்கள் டிராக்டரை பாதுகாக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும்; குறிப்பாக எக்சாஸ்ட் சிஸ்டம், இருக்கை மற்றும் கருவிகள் ஆகியவை. எனவே, அதை ஒரு கேரேஜில் நிறுத்துங்கள் அல்லது அதை நன்கு மூடி வையுங்கள்.
4. வழக்கமாக ஃப்ளூயிட்களை சரிபார்க்கவும்
டிராக்டரின் ஏதேனும் ஒரு பகுதியில் கசிவு இருந்தால், அந்த சேதத்திற்கு அதிக செலவு ஏற்படலாம். என்னென்ன பாகங்களை சோதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமையாளரின் கையேட்டை பார்க்கவும். நீங்கள் என்ஜின் ஆயில், கூலன்ட், பேட்டரி எலக்ட்ரோலைட், டிரான்ஸ்மிஷன் ஃப்ளூயிட் மற்றும் ஹைட்ராலிக் ஆயில் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
5. டயர்களில் சரியான அளவு காற்று உள்ளதை உறுதிசெய்யவும்
அனைத்து டிராக்டர்களுக்கும் ஒரே மாதிரியான காற்று அழுத்தம் தேவைப்படாது. அதே டிராக்டரில் கூட, முன்புற மற்றும் பின்புற டயர்களுக்கு வெவ்வேறு அழுத்தம் தேவைப்படலாம். எனவே, வழக்கமான இடைவெளியில் காற்று அழுத்தத்தை சரிபார்க்கவும்.
6. பிரேக்குகளை சரிபார்க்கவும்
பெரும்பாலும் அனைத்து டிராக்டர்களும் ஆட்டோமேட்டிக் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிரேக்கிங் சிஸ்டம் லூப்ரிகேட் செய்யப்பட்டு நன்கு வேலை செய்கிறது என்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் பிரேக்கிங் சிஸ்டம் சரியாக இல்லை என்றால், நீங்கள் அதை முடிந்தவரை விரைவில் சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.
7. ஃபில்டர்களை கண்காணியுங்கள்
அழுக்கு மற்றும் தூசி சிஸ்டத்தை மாசுபடுத்தும் மற்றும் பாகங்களில் பழுதை ஏற்படுத்தும். இந்த அசுத்தங்களுக்கு எதிராக சிஸ்டத்தைப் பாதுகாக்க டிராக்டர்களில் ஃபில்டர்கள் உள்ளன. ஃப்யூல் ஃபில்டர் மற்றும் ஏர் ஃபில்டரை அடிக்கடி சரிபார்ப்பது நல்லது. அதை சுத்தம் செய்யவும் அல்லது நல்ல நிலையில் இல்லை என்றால், சுத்தம் செய்ய முடியாவிட்டால் அவற்றை மாற்றவும்.
8. அடிக்கடி லூப்ரிகேட் செய்யவும்
டிராக்டர் நன்றாக செயல்பட வேண்டும் என்றால் அது நன்றாக லூப்ரிகேட் செய்யப்பட வேண்டும். நீங்கள் ஆயில் அளவை வழக்கமாக சரிபார்த்து நல்ல லூப்ரிகன்ட்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும். கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில்களை தவிர்க்கவும். டிராக்டரின் நகரக்கூடிய பகுதிகளை பார்த்து சுத்தம் செய்து அவற்றை கிரீஸ் செய்யும்.
9. ஓவர்லோடு செய்ய வேண்டாம்
நீங்கள் செய்யும் எந்த வேலைக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவு இணைப்பைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் டிராக்டரை ஓவர்லோடு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது அது விரைவில் பழுதாகிவிடும்.
உங்கள் டிராக்டரின் ஆயுள் நீங்கள் அதை எவ்வளவு நன்றாக பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றி டிராக்டரை பராமரிப்பதை உறுதிசெய்யவும்.