சென்னை, அக்டோபர் 25, 2023: இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் என்பிஎஃப்சி-களில் ஒன்றான டிவிஎஸ் கிரெடிட், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிதாக நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 40,000 க்கும் மேற்பட்ட இடங்களில் அற்புதமான கடன் சலுகைகளை வழங்கியுள்ளது.
இரு சக்கர வாகன கடன்களுக்கு, வாடிக்கையாளர்கள் 95% வரை நிதி, 60-மாத கடன் தவணைக்காலம் மற்றும் பிரத்யேக தள்ளுபடி வவுச்சர்களை வழங்கும் திட்டங்களைப் பெறலாம். மொபைல் போன்களை மேம்படுத்த மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதன் கன்ஸ்யூமர் கடன்களிலிருந்து பயனடையலாம், இது கூடுதல் கட்டணமில்லா இஎம்ஐ நன்மைகள், வழங்கப்பட்ட கடன் மதிப்பு மதிப்புள்ள தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் அடுத்தடுத்த வாங்குதல்களுக்கான கேஷ்பேக் ஆகியவற்றுடன் வருகிறது.
மேலும், நிறுவனம் அதன் முதன்மையான கன்ஸ்யூமர் ஊக்குவிப்பு பிரச்சாரமான “மேஜிக்கல் தீபாவளி”யின் 6வது சீசனையும் தொடங்கியுள்ளது. இந்த முழுமையான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் முயற்சி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் தொடுபுள்ளிகள் மற்றும் நேரடி தொடர்புகள் மூலம் தீவிரமாக ஈடுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரச்சார காலத்தில் டிவிஎஸ் கிரெடிட்டின் கடனைப் பெறும் வாடிக்கையாளர்கள், செல்ஃபி எடுத்தல்/ஸ்லோகன் எழுதுதல் போன்ற போட்டியில் கலந்துகொண்டு அதனை நிறுவனத்தின் சமூக ஊடகக் கணக்குகளில் இடுகையிடுதல் மூலம் தினசரி மற்றும் மெகா பரிசுகளை வெல்லலாம். போட்டி தற்போது நேரலையில் உள்ளது மற்றும் நவம்பர் 30, 2023 வரை தொடரும்.
இந்த பிரத்யேக சலுகைகளைப் பயன்படுத்தி, இந்த பண்டிகைக் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் டிவிஎஸ் கிரெடிட் அனைவரையும் அழைக்கிறது.
டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் பற்றி:
டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் ஆர்பிஐ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட டச் பாயின்ட்களுடன், இந்நிறுவனம் இந்தியர்களுக்கு பெரிய கனவு காணவும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்டின் நம்பர் ஒன் பைனான்சியர் மற்றும் முன்னணி டிராக்டர் பைனான்சியர்களில் ஒன்றாக இருக்கிறது, டிவிஎஸ் கிரெடிட் பயன்படுத்திய கார் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள், பயன்படுத்திய கமர்ஷியல் வாகனக் கடன்கள் மற்றும் அடமானமற்ற கடன்கள் பிரிவில் வேகமாக வளர்ந்து வருவதில் தடம் பதித்துள்ளது. இந்நிறுவனம் வலுவான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் இயக்கப்படுகிறது, நிறுவனம் 1.2 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவையை வழங்கிவருகிறது.
ருச்சிகா ராணா
சீனியர் மேனேஜர், பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்
மொபைல்: +91 9910036860
இமெயில்: ruchika.rana@tvscredit.com
இணையதளம்: https://www.tvscredit.com/