சென்னை, 10 ஆகஸ்ட் 2022:கடந்த 10 ஆண்டுகளாக டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட்டை வெற்றிகரமாக வழிநடத்திய பிறகு, திரு ஜி வெங்கட்ராமன் 31 ஆகஸ்ட் 2022 அன்று இயக்குநர் மற்றும் சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பிறகு திரு ஆஷிஷ் சப்ரா சிஇஓ பதவிக்கு பொறுப்பேற்க உள்ளார், அவர் செப்டம்பர் 2022 முதல் வாரத்தில் நிறுவனத்துடன் இணைவார்.
டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட்டின் இயக்குநர் திரு. சுதர்சன் வேணு கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக, டிவிஎஸ் கிரெடிட் வேகமாகவும் லாபகரமாகவும் வளர்ச்சியடைய மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. குறுகிய காலத்தில், சிறந்த பேலன்ஸ் ஷீட் உடன் நிறுவனம் ₹ 15,000+ கோடி ஏயுஎம்-க்கு வளர்ந்துள்ளது. ஆர்வமும் விவேகமும் கொண்ட வெங்கட் அவர்களின் தலைமைக்கு நன்றி. அடுத்த கட்டத்திற்கு, எங்கள் கவனம் அதிகரித்த டிஜிட்டல்மயமாக்கல், புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் மற்றும் விரைவான வளர்ச்சி ஆகியவற்றில் இருக்கும். ஆஷிஷ் தொடர்புடைய அனுபவம் மற்றும் பல சாதனைப் பதிவுடன் வருகிறார், மேலும் அவரது தலைமையின் கீழ், டிவிஎஸ் கிரெடிட் புதிய உயரங்களை எட்டி பல மடங்கு வளரும் என்று நான் நம்புகிறேன்.”
திரு. ஆஷிஷ் சப்ரா 25+ ஆண்டுகள் தொழில்முறை பணி அனுபவத்தைக் கொண்டுள்ளார் மற்றும் சில்லறை சொத்துக்கள், காப்பீடு, கார்டுகள், செல்வ மேலாண்மை உட்பட பரந்த அளவிலான நிதி தயாரிப்புகளில் பணியாற்றியுள்ளார் மற்றும் கிராஸ் விற்பனையில் வலுவான நிபுணத்துவத்தை கொண்டுள்ளார். டிவிஎஸ் கிரெடிட்டில் இணைவதற்கு முன்னர், அவர் பஜாஜ் குழுவுடன் ஹவுசிங் ஃபைனான்ஸ், பொது காப்பீடு மற்றும் என்பிஎஃப்சி தொழில்களில் 14+ ஆண்டுகளுக்கு பணியாற்றியுள்ளார். அவர் பி&எல் மேலாண்மை,
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகள், மூத்த பங்குதாரர்களை திறம்பட நிர்வகித்தல், தொடங்குதல் மற்றும் லாபத்தை மேம்படுத்த வணிகங்களை அதிகரித்தல். இவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எச்எஸ்பிசி மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
ருச்சிகா ராணா
சீனியர் மேனேஜர், பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்
மொபைல்: +91 9910036860
இமெயில்: ruchika.rana@tvscredit.com
இணையதளம்: https://www.tvscredit.com/
பதிவு செய்யுங்கள் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளுக்கு