டிவிஎஸ் கிரெடிட்டில், நாங்கள் தகுதி அடிப்படையிலான முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை கொண்டுள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் அல்லது தொகையையும் நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். மோசடி செய்பவர்கள் மோசடி இமெயில்கள்/சலுகைகளை அனுப்ப TVS கிரெடிட் டொமைன் ஐடியை பயன்படுத்தி ஏமாற்றுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

hamburger icon
products image

செய்தி வெளியீடுகள்

பிரத்தியேக நுண்ணறிவு மற்றும் சிறப்பம்சங்களைக் கண்டறியவும்

டிவிஎஸ் கிரெடிட் H1 FY24 இல் 14% புக் குரோத் உடன் ₹252 கோடி வரிக்குப் பிந்தைய நிகர லாபத்தைப் பதிவு செய்கிறது

வெளியீடு: டிவிஎஸ் கிரெடிட் தேதி: 28 | அக்டோபர் | 2023

சென்னை, அக்டோபர் 28, 2023: டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி என்பிஎஃப்சி-களில் ஒன்றாகும், செப்டம்பர் 30, 2023, அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை வெளியிட்டது, இது நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கிறது.

H1 எஃப்ஒய்24 இல் வரிக்கு பிந்தைய நிகர லாபம் ₹252 கோடி என என்பிஎஃப்சி அறிவித்தது. மார்ச்'23 நிலவரப்படி ₹20,602 கோடி உடன் ஒப்பிடும்போது, செப்டம்பர்'23 இல் நிறுவனத்தின் ஏயுஎம் 14% அதிகரித்து ₹23,516 கோடியாக உள்ளது. Q2 எஃப்ஒய்24 இல் வரிக்கு பிந்தைய காலாண்டு நிகர லாபம் ₹134 கோடி என நிறுவனம் அறிவித்தது.

Q2 எஃப்ஒய்24 முடிவுகள் சுருக்கம்:

• காலாண்டில் மொத்த வருமானம் ₹1,399 கோடியாக இருந்தது, இது Q2 எஃப்ஒய்23 உடன் ஒப்பிடும்போது 46% அதிகமாகும்
• காலாண்டில் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ₹134 கோடியாக இருந்தது, இது Q2 எஃப்ஒய்23 நிதியாண்டின் ₹96 கோடி உடன் ஒப்பிடும்போது, இது 40% வளர்ச்சியாகும்

எஃப்ஒய்24 இன் முதல் பாதியில், அரசாங்கத்தின் அதிக பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களால் கடன் தேவை தொடர்ந்து வலுவாக இருந்தது. H1 எஃப்ஒய்24 இன் போது, டிவிஎஸ் கிரெடிட்டின் தொழிலானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது, H1 எஃப்ஒய்23 உடன் ஒப்பிடும்போது 59% சீரான வளர்ச்சியுடன் கன்ஸ்யூமர் கடன்களின் வலுவான செயல்திறனால் வழிநடத்தப்பட்டது. H1 எஃப்ஒய்24 இல் நிறுவனம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, இதன் விளைவாக மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியது. டிஜிட்டல் மாற்றம் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் கிரெடிட் தனது அனைத்து தரவு பயன்பாடுகளையும் கிளவுட் பிளாட்ஃபார்மிற்கு மாற்றியுள்ளது, இது செயல்பாட்டு திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், டிவிஎஸ் கிரெடிட், தனிநபர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவும் வகையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் அற்புதமான கன்ஸ்யூமர் புரோமோஷன்களை வெளியிட உள்ளது.

டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் பற்றி:
டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் ஆர்பிஐ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட டச் பாயின்ட்களுடன், இந்நிறுவனம் இந்தியர்களுக்கு பெரிய கனவு காணவும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்டின் நம்பர் ஒன் பைனான்சியர் மற்றும் முன்னணி டிராக்டர் பைனான்சியர்களில் ஒன்றாக இருக்கிறது, டிவிஎஸ் கிரெடிட் பயன்படுத்திய கார் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள், பயன்படுத்திய கமர்ஷியல் வாகனக் கடன்கள் மற்றும் அடமானமற்ற கடன்கள் பிரிவில் வேகமாக வளர்ந்து வருவதில் தடம் பதித்துள்ளது. இந்நிறுவனம் வலுவான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் இயக்கப்படுகிறது, நிறுவனம் 1.2 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவையை வழங்கிவருகிறது.

ஊடக தொடர்புகள்: டிவிஎஸ் கிரெடிட்

ருச்சிகா ராணா
சீனியர் மேனேஜர், பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்
மொபைல்: +91 9910036860
இமெயில்: ruchika.rana@tvscredit.com
இணையதளம்: https://www.tvscredit.com/


  • இவற்றில் பகிரவும்

பதிவு செய்யுங்கள் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளுக்கு

வாட்ஸ்அப்

செயலியைப் பதிவிறக்குக

தொடர்பு கொள்ளுங்கள்