டிவிஎஸ் கிரெடிட்டில், நாங்கள் தகுதி அடிப்படையிலான முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை கொண்டுள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் அல்லது தொகையையும் நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். மோசடி செய்பவர்கள் மோசடி இமெயில்கள்/சலுகைகளை அனுப்ப TVS கிரெடிட் டொமைன் ஐடியை பயன்படுத்தி ஏமாற்றுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

hamburger icon
products image

செய்தி வெளியீடுகள்

பிரத்தியேக நுண்ணறிவு மற்றும் சிறப்பம்சங்களைக் கண்டறியவும்

டிவிஎஸ் கிரெடிட் இ.பி.ஐ.சி கேம்பஸ் சேலஞ்ச் ஆனது 96,000 க்கும் மேலான பதிவுகள் மற்றும் உயர்மட்ட கல்லூரிகளின் பங்கேற்புடன் புதிய சாதனைகளை படைத்துள்ளது

வெளியீடு: டிவிஎஸ் கிரெடிட் தேதி: 31 | அக்டோபர் | 2023

சென்னை, அக்டோபர் 31, 2023: டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் எம்ப்ளாயர் பிராண்டிங் முயற்சி, இ.பி.ஐ.சி கேம்பஸ் சேலஞ்ச் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கும், வலுவான திறமைக் குழுவை உருவாக்குவதற்கும் பெயர் பெற்றது. சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் ஒரு அசாதாரண மைல்கல்லை கண்டது, பதிவுகள் 96,000 ஐ தாண்டியது, இது முந்தைய ஆண்டை விட 100% வளர்ச்சியைக் குறிக்கிறது. ஐஐஎம் அகமதாபாத், எக்ஸ்எல்ஆர்ஐ ஜாம்ஷெட்பூர், ஜேபிஐஎம்எஸ் மும்பை, ஐஐஎஃப்டி டெல்லி, எஸ்விகேஎம்மின் என்எம்ஐஎம்எஸ் யுனிவர்சிட்டி மும்பை, ஐஐடி காரக்பூர் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்த வெற்றிக்கு பங்களித்தன.

இ.பி.ஐ.சி கேம்பஸ் சேலஞ்ச் சீசன் 5 புதிய பதிவுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், அதன் திட்டத்தில் பல அற்புதமான கூறுகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த சீசனில், டிவிஎஸ் கிரெடிட் 4,200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து, சமூக ஊடகங்கள் மூலம் 5,00,000+ ஐ எட்டியது. கூடுதலாக, ஐடி, உத்தி, நிதி மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் உள்ள சவால்கள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை போட்டி வழங்கியது. எம்சிக்யூ சோதனைகள், ஆன்லைன் ஹேக்கத்தான்கள், கேஸ் ஸ்டடி சமர்ப்பிப்புகள், டிவிஎஸ் கிரெடிட் லீடர்ஸ் வழங்கும் மாஸ்டர் கிளாஸ் அமர்வுகள் மற்றும் ஒரு சிறந்த ஜூரி குழுவிற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் பல சுற்றுகள் மூலம் போட்டி வெளிப்பட்டது. இந்த ஆண்டு, இ.பி.ஐ.சி ஆனது பிளேஸ்மென்ட் வாய்ப்புகளுடன் ₹10 லட்சம் வரை பரிசுகளை வழங்கியது.

டிவிஎஸ் கிரெடிட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சரண்தீப் சிங் கூறுகையில் "இ.பி.ஐ.சி கேம்பஸ் சேலஞ்ச் உண்மையிலேயே உயர்மட்ட திறமையாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாக உருவெடுத்துள்ளது" என்றார். இ.பி.ஐ.சி ஆனது வளர்ச்சி மனப்பான்மை மற்றும் புதுமைகளை வலியுறுத்தும் எங்கள் நிறுவனத்தின் மேலான நெறிமுறைகளுடன் இணைந்துள்ளது. இந்த ஆண்டு, இந்த முயற்சிக்காக பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்களில் ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், மேலும் பங்கேற்பின் வளர்ச்சியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

ஒரு அறிக்கையில், கடந்த சீசனின் இறுதிப் போட்டியாளர் கருத்துத் தெரிவிக்கையில், "இ.பி.ஐ.சி அனலிட்டிக்ஸ் சேலஞ்ச் எனக்கு தத்துவார்த்த அறிவை நடைமுறைப் பயன்பாட்டில் செயல்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியது" எனத் தெரிவித்தார். உண்மையான உலகப் பிரச்சனைகளில் பகுப்பாய்வுக் கருத்துகள் மற்றும் முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது பற்றிய எனது பார்வையை இது வளப்படுத்தியது. டிவிஎஸ் கிரெடிட்டின் இ.பி.ஐ.சி சேலஞ்சில் பங்கேற்பது எனது திறமைகளை மேம்படுத்த உதவியது மட்டுமின்றி டிவிஎஸ் கிரெடிட்டில் வேலை பெறவும் எனக்கு உதவியது.”

இ.பி.ஐ.சி கேம்பஸ் சேலஞ்ச் குழுவானது சீசன் 5 இன் அசாதாரண வெற்றியைக் கட்டியெழுப்ப, வரும் காலங்களில் திறமையாளர்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் பற்றி:

டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் ஆர்பிஐ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட டச் பாயின்ட்களுடன், இந்நிறுவனம் இந்தியர்களுக்கு பெரிய கனவு காணவும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்டின் நம்பர் ஒன் பைனான்சியர் மற்றும் முன்னணி டிராக்டர் பைனான்சியர்களில் ஒன்றாக இருக்கிறது, டிவிஎஸ் கிரெடிட் பயன்படுத்திய கார் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள், பயன்படுத்திய கமர்ஷியல் வாகனக் கடன்கள் மற்றும் அடமானமற்ற கடன்கள் பிரிவில் வேகமாக வளர்ந்து வருவதில் தடம் பதித்துள்ளது. இந்நிறுவனம் வலுவான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் இயக்கப்படுகிறது, நிறுவனம் 1.2 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவையை வழங்கிவருகிறது.

ஊடக தொடர்புகள்: டிவிஎஸ் கிரெடிட்

ருச்சிகா ராணா
சீனியர் மேனேஜர், பிராண்டிங் மற்றும் கம்யூனிகேஷன்
மொபைல்: +91 9910036860
இமெயில்: ruchika.rana@tvscredit.com
இணையதளம்: https://www.tvscredit.com/


  • இவற்றில் பகிரவும்

பதிவு செய்யுங்கள் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளுக்கு

வாட்ஸ்அப்

செயலியைப் பதிவிறக்குக

தொடர்பு கொள்ளுங்கள்