சௌஜன்யா அலுரி இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டம் பெற்றவர் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். புராடக்ட் மேனேஜ்மெண்ட், இன்ஜினியரிங், ஆபரேஷன்ஸ், அஜைல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மாற்றம், கிளவுட் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை மேற்பார்வையிடும் டெக்னாலஜி விஷன் மற்றும் ஸ்ட்ராட்டஜியை வழிநடத்துவதில் அவர் சிறந்து விளங்குகிறார்.. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸி துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
டிவிஎஸ் கிரெடிட்டில் சௌஜன்யா, நிறுவனத்தின் டெக் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரேட்டஜியை உருவாக்கும் பொறுப்பில் உள்ளார். டிவிஎஸ் கிரெடிட்டில் சேருவதற்கு முன்பு, அவர் நேசனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ)வில் டிஜிட்டல் தொழில்நுட்பத் தலைவராகப் பணியாற்றினார், மொபைல் பேமெண்ட் தளங்கள், தரவுத் தளங்கள், ஏஐ மாதிரிகள், கிளவுட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மற்றும் பிளாக்செயின் செட்டில்மென்ட் சிஸ்டம்களின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர் ஜிசி டிஜிட்டல், சிஃபி மற்றும் அக்சென்ச்சர் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் வாசிப்பது ஆகியவற்றில் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் உள்ளது.